புதுச்சேரி மீனவர்கள் சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் 12 பேருக்கு அக்., 15 வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. செப்., 27ல் காரைக்காலில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iytogqyw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களின் சிறைக்காவலை அக்., 15 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.