உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புரட்டாசி பொங்கல் விழா

புரட்டாசி பொங்கல் விழா

கமுதி: கமுதி அருகே கிடாரி குளம் கிராமத்தில் சித்திமுக்தி விநாயகர், தர்ம முனீஸ்வரர், பத்ரகாளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.சித்திமுக்தி விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் அலகு, வேல் குத்தி கிராமத்தின் முக்கிய வீதியில் ஊர்வலமாக தர்ம முனீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விநாயகர் உட்பட தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. கிராமம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை