உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் வினாடி வினா போட்டி

முதுகுளத்துாரில் வினாடி வினா போட்டி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றிய அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வினாடி வினா போட்டி கண்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிறுவனர் காந்திராசு துவக்கி வைத்தார். முதல்வர் அடலின் லீமா வரவேற்றார். போட்டியில் முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இளநிலை பிரிவில் விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி, இடைநிலை பிரிவில் முதுகுளத்துார் அரசு மேல் நிலைப்பள்ளி, மேல்நிலை பிரிவில் தேரிருவேலி ராவுத்தர் சாகிப் மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப் பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் வைஷ்ணவி ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை