மேலும் செய்திகள்
போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை பரப்பும் மரம்
22-Jun-2025
உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கையில் இருந்து எட்டிவயல் வழியாக ராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் சிக்னல் பழுதாகியதால் கேட்டை திறக்க முடியாமல் வாகன ஒட்டிகள் காத்திருந்து சிரமப்பட்டனர்.ராமேஸ்வரம் செல்லும் பிரதான மார்க்கமாக உள்ள இந்த ரயில்வே கிராசிங்கில் நேற்று 4:05 மணிக்கு கேட் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உரிய முறையில் சிக்னல்கள் கிடைக்கவில்லை இதனால் உத்தரகோசமங்கை செல்லும் சாலையிலும் ராமநாதபுரம் செல்லக்கூடிய சாலையில் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை உணர்ந்த ரயில்வே ஊழியர்கள் இரும்புச் சங்கிலியால் கேட்டின் இருபுறங்களிலும் கட்டி வைத்தனர். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து 4:20 மணிக்கு ரயில் அவ்வழியாக கடந்து சென்றது. சிக்னல் கிடைக்காததால் ரயில்வே இரண்டு இரும்பு கம்பி கேட்டும் அடைக்கவில்லை என்பதால் தற்காலிக ஏற்பாடாக இரும்பு சங்கிலியால் கட்டி பாதுகாத்து நின்றோம் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர் சிக்னல் கிடைத்த பின் ரயில்வே கேட் முறையாக அடைக்கப்பட்டது.
22-Jun-2025