உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

முதுகுளத்துாரில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இப்பகுதிகளில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்கின்றனர். பருவ மழையை நம்பி விவசாயம் செய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.நேற்று மதியம் 2:00 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள வெண்ணீர் வாய்க்கால், விளங்குளத்துார், கன்னிசேரி, காக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியால் மகிழ்ச்சி அடைந்தனர். முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர். ஒரு சில தெருக்களில் கழிவு நீருடன் மழைநீர் தேங்குகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை