உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பளங்களில் மழை நீர் தேக்கம்

உப்பளங்களில் மழை நீர் தேக்கம்

தேவிபட்டினம்: உப்பளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளான திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரி மடம், நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உப் பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப் படும் முதல் தர உப்பு உணவு பொருட்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு தோல் பதனிடுதல், கருவாடு உலர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பளத் தொழில் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில், பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் கடலோரப் பகுதியிலுள்ள உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்டு தோறும் செப்., கடைசி வாரம் முதல் ஜன., வரை மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை தாமதத்தால் அக்.,லும் உப்பு உற்பத்தி நடக்கிறது. இந்நிலையில், பருவமழை துவங்கியதால் தற்போது உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஏராளமான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி