குடியிருப்பு பகுதியில் மழைநீர் அகற்றம்
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பாரனுார் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், கைலாச சமுத்திரம் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி குடியிருப்போர் பாதிப்படைந்தனர். ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் வரதராஜன் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து ஆயில் மோட்டார் வைத்து தண்ணீரை அகற்ற உத்தரவிட்டார். மழைநீர் அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள்நிம்மதி அடைந்தனர். பாரனுார் ஊராட்சி தலைவர் மணிமேகலை உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.