உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீடுகளை சுற்றிலும் தேங்கிய மழைநீர்

வீடுகளை சுற்றிலும் தேங்கிய மழைநீர்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே வீடுகளை சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் முதுகுளத்துார் கடலாடி ரோடு நீதிமன்றம் அருகே வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ