மேலும் செய்திகள்
முதுகுளத்துார் கிராமங்களில் உழவுப்பணி்
28-Aug-2025
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமப் பட்டனர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 1:00 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதுகுளத்துார் பேரூராட்சி, காக்கூர், செல்வநாயகபுரம், கடம்பன்குளம், வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. ஒரு சில கிராமங்களில் உழவு செய்யப்பட்டிருப்பதால் தண்ணீர் தேங்கியுள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது.இதனால் மக்கள் நடப்பதற்கு சிரமப் பட்டனர்.
28-Aug-2025