உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் ரோட்டில் மழைநீர் தேங்கியது

ராமேஸ்வரம் ரோட்டில் மழைநீர் தேங்கியது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்த கன மழையால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது.நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 100 மீ., வரை தண்ணீர் தேங்கியது. மேலும் தங்கச்சிமடத்தில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.மேலும் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலந்தது. ராமேஸ்வரத்தில் 50 மி.மீ., தங்கச்சிமடத்தில் 120 மி.மீ., பாம்பனில் 80 மி.மீ., மழை பதிவானது. இந்த திடீர் மழையால் வெப்ப சலனத்தில் சுட்டெரித்த ராமேஸ்வரம் பகுதி குளுகுளு என மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை