உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மறியலால் ஒரு மணிநேரம் ரோட்டில் நின்ற விநாயகர்

மறியலால் ஒரு மணிநேரம் ரோட்டில் நின்ற விநாயகர்

ராமேஸ்வரம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாசுவாமி கோயிலின் துணைகோயிலான காட்டுப்பிள்ளையார் கோயிலுக்கு எழுந்தருளிய விநாயகர் வாகனம் ஆட்டோ டிரைவர்கள் மறியலால் ஒரு மணிநேரம் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்பு கிழக்குரத வீதியில் பக்தர்களின் நலன் கருதி, வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, செப்.,1 முதல் அனைத்து வாகனங்களும் நான்குரத வீதியில் நிறுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. நேற்று அதிகாலை 4 மணி முதல் வாகனம் நிறுத்துவதை போலீசார் தடுத்ததால், பக்தர்கள் இடையூறுமின்றி கோயிலுக்கு சென்றனர். போலீசாரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ டிரைவர்கள், காலை 8 மணிக்கு மேற்கு கோபுர வாசல் முன்பு 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ரோட்டில் நிறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, சதுர்த்தியை முன்னிட்டு காட்டுப்பிள்ளையார் கோயிலுக்கு வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்த விநாயகர் வாகனம் தெற்குரத வீதியில் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்களும், பக்தர்களும் அதிருப்தி அடைந்தனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்திய பின், மறியல் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதமாக காட்டுப்பிள்ளையார் கோயிலுக்கு விநாயகர் எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ