உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் குளத்தில் கழிவு நீர் சங்கமம்

கோயில் குளத்தில் கழிவு நீர் சங்கமம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கூரி சாத்த அய்யனார் கோயிலுக்கு உட்பட்ட குளத்தில் சாக்கடை நீர் கலப்பதால், பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூரி சாத்த அய்யனார் கோயில் அருகே உள்ள குளம் நாளுக்கு நாள் சுருங்கி வருவதோடு, வீடுகளிலில் இருந்து வெளிவரும் கழிவு நீர், குளத்தில் கலப்பதால், குளிப்பவர்கள் பல்வேறு தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். வீடுகளின் செப்டிக் டாங்க் கழிவுகளும் இதில் திறந்து விடப்படுகிறது. பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கோயில் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவு நீர் கலக்காத வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை