உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காணாமல் போனது வி.ஏ.ஓ., கட்டடம் ஜன்னல், கதவுகள்

காணாமல் போனது வி.ஏ.ஓ., கட்டடம் ஜன்னல், கதவுகள்

கமுதி : கமுதி அருகே சீமானேந்தலில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வி.ஏ.ஓ., கட்டடம் காணாமல் போய்விட்டது. கமுதி யூனியன் பாப்பாங்குளம் ஊராட்சியை சேர்ந்தது சீமானேந்தல். இக்கிராம மக்கள் சான்றிதழுக்காக அலையாமல் இருக்க இங்கு 2003-04ம் நிதியாண்டில், வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால், கட்டடம் முறையாக பயன்படுத்தப்படாததால் பாழடைந்து விட்டது. இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இங்கு நூலகம் கட்டப்பட்டது. இதற்கு வேண்டிய கதவு, ஜன்னல்கள், பயன்படுத்தபடாத வி.ஏ.ஓ., அலுவலகத்திலிருந்து பெயர்ந்து பயன்படுத்தப்பட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இதை உள்ளாட்சி நிர்வாகம் மறுக்கிறது. இருப்பினும் வி.ஏ.ஓ., அலுவலகத்திலிருந்து காணாமல் போன கதவு, ஜன்னல்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்படவில்லை. வி.ஏ.ஓ., அலுவலகத்தை பராமரித்து செயல்பட வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை