| ADDED : செப் 15, 2011 09:13 PM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும், என கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மூன்று நகராட்சிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ளனர். கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கீழக்கரை நகராட்சி தலைவர் பதவியை பெற ம.ம.க.,வினர் தலைநகரில் காய் நகர்த்தி வருவதாக கிடைத்த தகவலால் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி முன்னாள் துணை தலைவர் இம்பாலா முகம்மது உசேன், முன்னாள் பொருளாளர் முகைதீன் இபுராகிம், மற்றும் அ.தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரன் உட்பட நான்கு பேர் விருப்ப மனு அளித்து உள்ளனர். கீழக்கரை நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க.,விற்கே ஒதுக்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். 'பொது வேட்பாளர் உட்பட எதிர்த்து போட்டியிடும் யாரையும் சந்திக்க தயார்' என அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.