உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நோய் பரப்பும் இடமாக ராமநாதபுரம் அரசு  மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது சட்டசபை உறுதிமொழிக்குழு எம்.எல்.ஏ., அருள் பேட்டி

நோய் பரப்பும் இடமாக ராமநாதபுரம் அரசு  மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது சட்டசபை உறுதிமொழிக்குழு எம்.எல்.ஏ., அருள் பேட்டி

ராமநாதபுரம்,: சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நோயை உருவாக்கக்கூடியஇடமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைஉள்ளது என சட்டசபை உறுதிமொழிக் குழு உறுப்பினரும் பா.ம.க., மாநில இணை பொதுச் செயலாளரான அருள் எம்.எல்.ஏ.,(பா.ம.க.,) வேதனை தெரிவித்தார். தமிழக சட்டசபை உறுதிமொழிக் குழுவினர் நேற்று ராமநாதபுரம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சென்று சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் உறுதிமொழிகுழு உறுப்பினர்களில் ஒருவரான பா.ம.க. சேலம்மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டோம்.கண்ணுக்கெட்டிய துாரம் வரை விவசாயமே இல்லை. மத்திய அரசு இந்த மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக அறிவித்து எவ்வளவுநிதி கேட்டாலும் வழங்குவதற்கு தயாராக உள்ளது.அதை பெற்று வளர்ச்சி பணிகளை உருவாக்க அதிகாரிகள்தவறிவிட்டனர். எங்களது சேலம் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்டிருக்க கூடிய வளர்ச்சியோடு ஒப்பிடும் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 சதவீதம் தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையை பார்வையிட்டோம். குழு வருகிறதுஎன்பதற்காக ஒரு வார காலமாக சுத்தம் செய்யும் பணி நடந்ததாக கூறினார்கள். இருந்த போதிலும் மருத்துவமனையின் பல பகுதிகளிலும் சுகாதாரம் இல்லை.வார்டுக்கு அருகே கழிவுநீரால் சுகாதாரக்கேடாக உள்ளது. நோய்க்கு சிகிச்சை பெற வரும் மக்களுக்கு நோயை உருவாக்கும் இடமாக மருத்துவமனை உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம்தேவையான நிதியை மாவட்ட நிர்வாகம் கேட்டு பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை