உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கையில் ஒதுங்கிய மீனவர்உடல் அடையாளம் தெரிந்தது

இலங்கையில் ஒதுங்கிய மீனவர்உடல் அடையாளம் தெரிந்தது

ராமேஸ்வரம்:இலங்கை மன்னார் கடற்கரையில் இலங்கை போலீசாரால் கைப்பற்றப்பட்ட உடல் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் லீன் என தெரியவந்தது.இலங்கை தலைமன்னார் கடற்கரையில் மீனவர் உடல் ஒதுங்கியது. இந்திய ரூபாய் மற்றும் காசுகளை வைத்து அவர், இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரியவந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மேலமுட்டம் கடற்கரையிலிருந்து கடந்த ஜூலை 20ல் கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றவர் லீன் கரை திரும்பாத நிலையில், உறவினர்களால் புகார் செய்யப்பட்டது. இலங்கை போலீசார் கூறிய அடையாளங்களை வைத்து, அங்கு கடற்கரையில் ஒதுங்கியது லீன் என்று அவரது மகன் எவரி தெரிவித்தார். தொடர்ந்து நாகர்கோவில் கடற்கரை அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் பாதிரியார் கில்டஸ், எவரி ஆகியோர் தலைமன்னார் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள லீன் உடலை பார்வையிட, இலங்கை அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னார் செல்ல இந்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கி, உதவ வேண்டும் என்று நிரபராதி மீனவர்களை மீட்கும் தமிழக பிரதிநிதி அருளானந்தம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை