உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடியில் மனநோயாளிகள் அட்டகாசம்

ஏர்வாடியில் மனநோயாளிகள் அட்டகாசம்

கீழக்கரை:ஏர்வாடியில் மனநோயாளிகள் கல்வீச்சு தொடர் சம்பவமாக உள்ளதால் நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். ஏர்வாடி தர்கா அருகே நடந்து சென்ற ஆசிரியர் மீது கல்வீசி தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றார். இதே போல் டாக்டர் கார் மீதும், நாகர்கோவிலிருந்து நேர்ச்சிக்காக வந்த ஷகிலா என்பவர் மீதும் கல்வீச்சு நடந்துள்ளது. ஏர்வாடியில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஆதரவற்ற மனநோயாளிகள், பிச்சைக்காரர்களை மீட்டு அந்தந்த பகுதி மருத்துவமனை களில் சிகிச்சை அளித்து ஆதரவற்றோர் இல்லம், காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மன நோயாளிகள் அதிகமாக திரியும் ஏர்வாடியில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் மக்கள் அதிருப்தியயடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை