| ADDED : செப் 03, 2011 12:28 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு துவக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவிலிருந்து கன்னியாகுமரி முனை வரை மன்னார் வளைகுடா பரவி காணப்படுகிறது. இதில் அரியவகை உயிரினங்களாக கடல்பசு, அட்டை, கடல் குதிரை, கடல் ஆமைகள், டால்பின்கள், திமிங்கலம், இறால்கள், நண்டுகள், முத்து சிப்பிகள், கடல் புழுக்கள், விசிறிகள், பவளப்பாறை மீன்கள், கடல் பன்றி காணப்படுகின்றன. தடை செய்யப்பட்ட உயிரினங்களை பிடித்தல், கொல்லுதல், விஷம் வைத்தல் போன்ற செயல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதில் முக்கியமாக கடல் அட்டை கடத்தப்படுவது தொடர்கிறது. கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். வன உயிரினங்கள் அழிவதை தடுக்கும் வகையில், மத்திய அரசின் கீழ் வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு ராமநாதபுரத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.