உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க.,போட்டிவைகோ உறுதி

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க.,போட்டிவைகோ உறுதி

பரமக்குடி:'' உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க.,விற்கு ஆதரவளிக்க வேண்டும்'' என, ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ பேசினார். பரமக்குடி காந்தி சிலை முன்பு நடந்த பொது கூட்டத்தில், அவர் பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், நாங்கள் போட்டியிடாததால் மக்கள் மத்தியில், எங்கள் மீது கவனம் திரும்பியுள்ளது. சட்டசபையில் தூக்குத்தண்டனை குறித்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்து வரவேற்கிறேன். கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால், கேரளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் உடைப்போம். ஊழலை எதிர்க்க, மீனவர்களை நலன் காக்க, விவசாயிகள் பாதுகாப்பாக இருந்திட, உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., விற்கு ஆதரவளிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ