/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமான ராமநாதபுரம் ஊருணிகள்
கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமான ராமநாதபுரம் ஊருணிகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதரமாக உள்ள ஊருணிகளில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளன.ராமநாதபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் 23 ஊருணிகள் உள்ளன. கடந்த காலத்தில் ஊருணி தண்ணீரை குளிக்க, துவைக்க மக்கள் பயன்படுத்தினர். இந்த ஊருணிகள் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் ஆதராமாக உள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் ஊருணிகள் நிரம்பிய போதும் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.குறிப்பாக நீலகண்டி ஊருணி, செம்மங்குண்டு ஊருணிகள் நிரம்பியுள்ளன. ஆனால் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்தால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஊருணிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.