மாநில ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் அணி வெற்றி
ராமநாதபுரம்: தேனியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 2வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி ராமநாதபுரம் மாணவர்கள் சாதித்தனர். நடப்பு ஆண்டிற்கான 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்டத்தில் பிப்.,9 முதல் 11 வரை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அரசு விளையாட்டு விடுதி ஹாக்கி மாணவர்கள் பங்கேற்றனர்.இவர்கள் தொடர்ச்சியாக 2வது முறையாக கோப்பையை கைப்பற்றினர். மாணவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், மாவட்ட ஹாக்கி பயிற்றுநர் மணிகண்டன், உடற்கல்வி இயக்குநர் தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.