உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிலிப்பைன்ஸ் காதலியை கரம் பிடித்த ராமநாதபுரம் இளைஞர்

பிலிப்பைன்ஸ் காதலியை கரம் பிடித்த ராமநாதபுரம் இளைஞர்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தீபன் குமார், 30. இவர் கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அர்ஷா 28, என்ற பெண்ணும் பணிபுரிகிறார். இருவரும் கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஹிந்து முறைப்படிவேத மந்திரம் முழங்க ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இருவரின் திருமணம் நடந்தது. மணமகன் தீபன் குமார் கூறுகையில் ''இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் ஒப்புதலுடன் பத்திரிகை அடித்து, உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்துள்ளோம். ஒரே இடத்தில் பணிபுரிந்ததால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் ''என்றார். மணப்பெண் அர்ஷா கூறுகையில்'' தீபன் குமாரை மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த திருமணத்தை தமிழ் கலாசார அடிப்படையில் ஹிந்து முறைப்படி நடத்தினோம்.என்றார். காதலித்த வாலிபரை கடல் கடந்து வந்து திருமணம் செய்த பிலிப்பைன்ஸ் பெண்ணை உறவினர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ