வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மீனெல்லாம் கோடை விடுமுறை முடிஞ்சி இலங்கைப் பக்கம் ஓடிப். போயிருச்சாம்.
ராமேஸ்வரம்:தடை காலம் முடிந்து 63 நாட்களுக்கு பின் இன்று (ஜூன் 18) ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் அனுமதி வழங்கினர்.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் தடை காலம் முடிந்தும் தென்மேற்கு சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு மேலும் 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் காற்றின் வேகம் சற்று தணிந்ததால் இன்று(ஜூன் 18) மீன்பிடிக்க செல்ல ராமேஸ்வரம் மீன்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் படகுகளில் 10 முதல் 20 வரை ஐஸ் பார்கள், 300 முதல் 1000 லி., வரை டீசல் ஏற்றினர்.மேலும் நடுக்கடலில் சமைத்து சாப்பிட அரிசி, மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் என ஏராளமான உணவுப் பொருட்களை படகில் ஏற்றினர். அதிக இறால் மீன் கிடைக்கும் ஆவலில் 63 நாட்களுக்குப் பின் இன்று மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி உள்ளனர்.நேற்று காலை மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க பாம்பன் மீனவர்கள் சென்றனர்.மீன்துறை அனுமதி சீட்டு இன்றி மீன்பிடிக்க செல்ல கூடாது. இலங்கை அகதிகளை மீனவர்களாக படகில் ஏற்றிச் செல்லக்கூடாது. இதனை மீறினால் மாவட்ட நிர்வாகம், இந்திய கடற்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மீனெல்லாம் கோடை விடுமுறை முடிஞ்சி இலங்கைப் பக்கம் ஓடிப். போயிருச்சாம்.