உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர் முடிவு

ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர் முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று ஜூன் 16ல் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.மீன்பிடி தடை காலம் (61 நாட்கள்) ஜூன் 14ல் இரவு 12:00 மணிவுடன் முடிகிறது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று (ஜூன் 14) மாலை மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்துறை எச்சரித்தது. நேற்று ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசு தலைமையில் நடந்த கூட்டத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் மல்லிபட்டினத்தில் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wxx42dlq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் அரசு விதிக்கு உட்பட்டு ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க செல்வது எனமுடிவு செய்யப்பட்டது.அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க செல்வது எனவும், இதனை மீறி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் படகுகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது.மேலும் 61 நாட்களுக்கு பின் வலையில் சிக்கும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம், மீன்துறை அதிகாரிகள் ஏற்றுமதி நிறுவனத்திடம் பேச்சு நடத்த வேண்டும் என தீர்மானத்தில் தெரிவித்தனர். மீனவர் சங்க தலைவர்கள் சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !