உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து டிச., 14ல், 379 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல், இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், தங்கள் பகுதி எனக்கூறி, துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் பீதியடைந்த, 100க்கும் மேற்பட்ட படகின் மீனவர்கள் அன்று இரவே வெறும் படகுடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ