உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 7வது நாளாக ஸ்டிரைக்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7வது நாளாக ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: - இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று 7ம் நாளாக வேலை நிறுத்தம் செய்தனர். இதில் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15க்கு பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை 61 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சசம்பவம் பீதியை ஏற்படுத்தியதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 90 பேர் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் சிறையில் உள்ள மீனவர்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆக., 11 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றனர். 7ம் நாளான நேற்றும் ஸ்டிரைக் தொடர்ந்ததால் 600 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. ஸ்டிரைக்கால் அன்றாட குடும்பச் செலவுக்கு வருவாய் இன்றி மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதித்துள்ளனர். இது நீடித்தால் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியேறி தொழிலுக்காக கேரளா செல்லும் நிலை ஏற்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை