உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கேரளா சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

கேரளா சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதால் மீனவ இளைஞர்கள் வேலை தேடி கேரளா சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து ஜூன் 15 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் இலங்கை கடற்படையினர் 61 மீனவர்கள், 10 படகுகளை சிறைபிடித்துள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை பிடித்த படகுகள், மீனவர்களை விடுவிக்க கோரி நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். அன்றாட செலவுக்கு வழியின்றி சிரமம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள மீனவ இளைஞர்கள் கன்னியாகுமரி, முட்டம், கேரள மாநிலம் கொச்சி உள்ளிட்ட பகுதியில் கூலித் தொழிலாளிகளாக செல்கின்றனர். இந்நிலை நீடித்தால் பெரும்பாலான மீனவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரி, கேரளாவில் குடியேறுவர் என்ற அச்சம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை