உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரத்திற்கு போதிய ரயில் இணைப்பு இல்லை வாராந்திர ரயில்கள் நிறுத்தம்

 ராமேஸ்வரத்திற்கு போதிய ரயில் இணைப்பு இல்லை வாராந்திர ரயில்கள் நிறுத்தம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படாததால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாத புரம் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதி யான ஹூப்ளியிலிருந்து ராமநாதபுரத்திற்கு 2019 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. புதிய பாம்பன் பால கட்டுமானபணி முடிந்தவுடன் ராமேஸ் வரம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து பெங்களூரு, ஓசூரு, சேலம் பகுதிகளுக்கு செல்ல இந்தரயிலை மட்டும் நம்பி யுள்ளனர். அதுமட்டுமின்றி கர் நாடகாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் பயனடைந்தனர். மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த ரயிலை நிறுத்தியது மக் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு முன்பு இயக்கப்பட்ட செகந் திராபாத் - -ராமநாதபுரம் சிறப்பு ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநில சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இரு ரயில்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களிலும் எவ்வித சிறப்பு ரயில்களும் இயக்கப்படவில்லை. நிறுத்தப்பட்ட சிறப்பு ரயில்களை நிரந்தர ரயில்களாக ஆன்மிக பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு இயக்க ரயில்வே நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை