உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் ரதவீதி பந்தல் சேதம்

ராமேஸ்வரம் கோயில் ரதவீதி பந்தல் சேதம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் பக்தர்களுக்கு அமைத்த பந்தலை பால்பாக்கெட் விநியோகம் செய்யும் லாரி சேதப்படுத்தியது.ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்ததால் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பெரிதும் பாதித்தனர். இதனால் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் கோயில் கிழக்கு, தெற்கு, வடக்கு ரதவீதியில் நிழல் தரும் பந்தல் அமைத்தனர். இதன் மூலம் வெப்ப சலனத்தில் இருந்து பாதுகாப்பாக பக்தர்கள் நடந்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை ராமேஸ்வரம் கிழக்கு ரத வீதியில் உள்ள டீக்கடைக்கு பால் விநியோகிக்க வந்த ஆவின் பால் லாரி பந்தல் இரும்பு துாண் மீது மோதி சேதப்படுத்தியதில் பந்தல் விழுந்தது. இதையடுத்து லாரி டிரைவர் தமிழ்ச்செல்வம் 38, பந்தலை சீரமைத்து தருவதாக கூறியதால் கோயில் போலீசார் லாரியை அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை