ராமேஸ்வரம் கோயில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் அதிகாரியிடம் முறையீடு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தனியார் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களை பணி நீக்கம்செய்ததை கண்டித்து கோயில் அதிகாரியிடம் பணியாளர்கள் முறையிட்டனர்.ராமேஸ்வரம் கோயிலில்துாய்மை பணியை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு இதில் 130 பேர் ஒப்பந்த துாய்மை பணியாளராக உள்ளனர். இவர்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவதால் அதற்கு ஏற்ப ஊதியம் வழங்கவும், வருங்கால வைப்பு நிதியை முறையாக வங்கி கணக்கில் செலுத்தக் கோரி சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் புகார் செய்த 29 பெண் ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். இதனை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., ராமேஸ்வரம் தாலுகா செயலாளர் செந்தில்வேல் தலைமையில் பணியாளர்கள் கோயில் இணை ஆணையர் சிவராம்குமாரை சந்தித்து முறையிட்டனர். ஊதியம் உயர்வு, வருங்கால வைப்பு நிதி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் (செப்.21) பணியில் சேர நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்தார். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.