உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜன.25ல் ராமேஸ்வரம் கோயில் நடையடைப்பு

ஜன.25ல் ராமேஸ்வரம் கோயில் நடையடைப்பு

ராமேஸ்வரம்:தைப்பூச தெப்பத் தேரோட்டத்தையொட்டி ஜன.25ல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயில் தீர்த்த குளத்தில் ஜன.24ல் பிள்ளையார் தெப்பம் நடக்க உள்ளது.மறுநாள் (ஜன.25ல்) தைப்பூச தெப்பத் தேரோட்டத்தையொட்டி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் காலை 10:00 மணிக்கு புறப்பாடாகி லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருள்கிறார். அன்று மாலை 6:00 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும் தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் குளத்தை வலம் வந்து தைப்பூச தெப்ப தேரோட்டம் நடக்கும். இதன்பின் இரவு 10:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்புவார்கள்.இதனால் அன்று காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ