உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன் கடை திறப்பு விழா

ரேஷன் கடை திறப்பு விழா

பரமக்குடி: பரமக்குடி 13-வது வார்டு சின்னக்கடை தெருவில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. பரமக்குடி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை வகித்து குத்து விளக்கேற்றினார்.நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா முன்னிலை வகித்தனர். இளநிலை பொறியாளர் சுரேஷ்பாபு வரவேற்றார். நகராட்சி கவுன்சிலர்கள் அப்துல் மாலிக், ஜீவரத்தினம், கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ