உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன்கடை பணியாளர்கள் ஏப்.8 ல் வேலை நிறுத்தம் 

ரேஷன்கடை பணியாளர்கள் ஏப்.8 ல் வேலை நிறுத்தம் 

ராமநாதபுரம்:விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு பணியை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுத்துதல், இணையதள சேவையை மேம்படுத்துதல், பொது விநியோகத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஏப்., 8 ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தவுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என சங்க மாநில துணைத்தலைவர் தினகரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி