மேலும் செய்திகள்
இன்றும் நாளையும் குடிநீர் நிறுத்தம்
09-Sep-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவில் முதல் முறையாக பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படை பெண் போலீசார் திலகவதி, கமலி ஆகியோர் தேவசேனா என்ற மோப்ப நாயுடன் 6 மாதம் பயிற்சி எடுத்தனர். மோப்ப நாயை கையாளும் முறை, மோப்ப நாய் உதவியுடன் வெடி மருந்து கண்டுபிடிப்பது, கட்டளையிடும் முறை குறித்து இரு போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றுகின்றனர்.
09-Sep-2025