உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீபாவளிக்கு முதல் நாள் பஸ்கள் குறைப்பு: ரூ.பல கோடி வர்த்தகம் பாதிப்பு

தீபாவளிக்கு முதல் நாள் பஸ்கள் குறைப்பு: ரூ.பல கோடி வர்த்தகம் பாதிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளிக்கு முதல் நாள் அக்.,30ல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காட்டி காலை முதல் மாலை பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் வருகையின்றி ரூ.பல கோடி வர்த்தம் பாதிக்கப்பட்டது என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.இந்தாண்டு தீபாவளிக்கு முதல் நாள் அக்.,30 முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காட்டி பரமக்குடி, மானாமதுரை, பார்த்திபனுார், கமுதி, சாயல்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு காலை முதல் இரவு வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.அதே நேரம் அங்கு கடைகளை திறந்து தீபாவளி வியாபாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். பஸ்கள் இல்லாததால் மக்கள் வருகையின்றி முக்கிய வர்த்தக இடமான பரமக்குடி மற்றும் கமுதி, பார்த்திபனுார், முதுகுளத்துார், சாயல்குடி, சிக்கல் ஆகிய இடங்களில் ரூ.பல கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.முதுகுளத்துார் வியாபாரிகள் முருகன், நம்பு கூறுகையில், 'தீபாவளி பண்டிக்கு முதல் நாள் தான் ஜவுளி, பலசரக்கு என பொருட்கள் 80 சதவீதம் விற்பனையாகும். இதை நம்பி ஒவ்வொரு கடைகளிலும் ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சரக்கு வாங்குகிறோம். தீபாளிக்கு முதல் நாள் மாலை பஸ்கள் இயக்கப்பட்டது. இருப்பினும் 30 சதவீதம் கூட விற்பனை ஆகவில்லை. முதலீட்டை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை