உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன் ஆபத்தான மரக்கிளை அகற்றம்

ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன் ஆபத்தான மரக்கிளை அகற்றம்

ரெகுநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்த ஆபத்தான் மரக்கிளைகள் அகற்றப்பட்டது.ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே வேப்ப மரக்கிளைகளுக்குள் ஆபத்தான உயரழுத்த மின்கம்பிகள் செல்கிறது. பள்ளி நுழைவு வாயில் அருகே ஏராளமான பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் அதிகம் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் புகார் அளித்தும் வேப்ப மரத்தின் கிளைகளை அகற்றாமல் தொடர்ந்து மெத்தனமாக மின்வாரியத்தினர் இருந்து வந்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த நவ.20ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த ஆபத்தான மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ரெகுநாதபுரம் துணை மின் நிலைய, மின்வாரிய அலுவலர்கள் உடனிருந்து இப்பணியை மேற்கொண்டனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை