மேலும் செய்திகள்
சாலையை மறைக்கும் கருவேல மரங்கள்
30-Aug-2024
திருப்புல்லாணி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்புல்லாணி ஊராட்சியில் ரோட்டோர சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஊருணி கரையோரங்களிலும், ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்களால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணற்றை சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருந்தது. ஊருணி கரையோரங்களில் இடையூறு ஏற்படுத்தும் முள் மரங்கள் குறித்த செய்தி நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை முதல் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மூலம் சாலையோர சீமைக் கருவேல மரங்களை ஊராட்சி நிர்வாகத்தினர்அகற்றி துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.ஊராட்சிக்கு சொந்தமான நான்கு ஊருணிகளிலும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி கரைகளில் நிழல் தரும் மரங்கள் நட்டு பாதுகாக்க உள்ளதாக தினைக்குளம் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
30-Aug-2024