உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மலட்டாற்றின் தடுப்பணையில் தண்ணீர் தேக்க வழியின்றி கடலுக்கு வீணாக செல்லும் அவலம் சீமைக் கருவேல மரங்களை அகற்றுங்க

மலட்டாற்றின் தடுப்பணையில் தண்ணீர் தேக்க வழியின்றி கடலுக்கு வீணாக செல்லும் அவலம் சீமைக் கருவேல மரங்களை அகற்றுங்க

சாயல்குடி: குண்டாற்றில் இருந்து கிளை ஆறு வழியாக வரக்கூடிய மலட்டாற்றில் மழைக் காலங்களில் தண்ணீர் சேகரிக்க வழியின்றி வீணாக மூக்கையூர் கடலில் வீணாகிறது.கடந்த 2019ல் ரூ.3 கோடியில் 300 மீ., நீளத்தில் 3 மீ., உயரத்தில் மலட்டாறு பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பருவ மழைக் காலங்களிலும் தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால் மறுகால் பாய்ந்து வெளியேறும் வெள்ள நீர் மலட்டாறு பாலம் வழியாக கடந்து மூக்கையூர் கடலில் வீணாகிறது.இதையடுத்து 12 கி.மீ., பரப்பிலான பகுதியில் இரு புறங்களிலும் முறையாக கரைகளை பலப்படுத்தாமல் உள்ளனர். சீமைக் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. ஆற்றின் வழித்தடம் பெருவாரியாக குறுகி வருகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக டிராக்டர்களில் மணல் அள்ளி வருகின்றனர்.அவற்றை தடுக்க வேண்டிய வருவாய்த் துறையினர் மற்றும் கனிமவளத் துறையினர் கண்டும் காணாமலும் உள்ளனர். 3000 ஹெக்டேரில் நெல், மிளகாய், சிறு குறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பல ஆயிரம் ஏக்கரில் பனை மரக்காடுகள் உள்ளன. மலட்டாற்றின் நீர் வழித்தடத்தை நம்பி ஏராளமான கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் உள்ளன. தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்பதால் பருவமழை காலங்களில் தண்ணீர் வெளியேறி சேமிக்க இயலாமல் உள்ளது. தடுப்பணையின் கரைப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கிய பகுதிகளில் துார்ந்து போய் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.எனவே கண்மாய்ப் பாசன பொதுப்பணித்துறையினர் முறையாக ஆய்வு செய்து மலட்டாற்றின் வழித்தடங்களை மீட்டெடுக்கவும், ஆண்டு முழுவதும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ