உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை கார், டூவீலர்களில் வரத் தடை

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை கார், டூவீலர்களில் வரத் தடை

ராமநாதபுரம் : பரமக்குடியில் செப்.,11ல் நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை வாகனங்கள், டூவீலர்களில் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளதாவது: இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்த வரும் முக்கியத் தலைவர்கள், பொது மக்களுக்கு முன் அனுமதி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வெளியூர்களில் இருந்து சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். டூவீலர்கள், வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை. மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படும். கார், பஸ்களின் கூரையில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வாகனத்திற்கான முன் அனுமதி பெற்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் வர வேண்டும் என்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஏ.எஸ்.பி. குணால் உத்தம் ஷ்ரோதே, சமூக அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை