மேலும் செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
19-Jun-2025
ராமநாதபுரம்: பிற மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்திலும் நுாறு நாள் வேலை திட்டத்திற்கு தனி பி.டி.ஓ., நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் வலியுறுத்தினார்.ராமநாதபுரத்தில் நடந்த ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் கூறியதாவது:தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிராமப்புற வேலைகளை கண்காணிக்க தனி பி.டி.ஓ., தலைமையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதே போன்று தமிழகத்திலும் நியமிக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு தனியாக பி.டி.ஓ., அல்லது துணை பி.டி.ஓ., உட்பட அலுவலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
19-Jun-2025