மேலும் செய்திகள்
சேதமடைந்த நிழற்குடை சீரமைக்க எதிர்பார்ப்பு
31-Jan-2025
கீழக்கரை; கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பிடுமதுரையில் பயணியர் நிழற்குடை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாமல் அப்படியே உள்ளது.தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு கும்பிடுமதுரையில் ரூ.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை பல மாதங்களாக கட்டப்பட்டு வருகிறது. பணிகள் பாதியில் உள்ளது. அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் இதனருகே இரண்டு லட்சம் லி., கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் பாதியுடன் உள்ளதால் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் கூறியதாவது:தற்போது வடக்கு கும்பிடுமதுரையில் பயணியர் நிழற்குடை இல்லாததால் திறந்த வெளியில் பஸ்சிற்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தேவைப்படும் இடங்களில் பயணியர் நிழற்குடையை அமைக்க முன்வர வேண்டும்.எனவே குறிப்பிட்ட உரிய நேரத்தில் கட்டுமானப் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு உரிய நிதியை ஒதுக்க திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
31-Jan-2025