மாணவர் விடுதியில் சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
முதுகுளத்துார் : முதுகுளத்துார்- கமுதி ரோடு பஸ் பணிமனை அருகே அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு முதுகுளத்துார் அரசு, தனியார் பள்ளியிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவர் விடுதி மூடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்தது. தற்போது சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. கால்நடைகள் உலா வரும் சூழல் இருப்பதால் அரசு மாணவர் விடுதியில் முழுவதுமாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.