உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அங்கன்வாடி மையங்கள் திறப்பதற்கு கோரிக்கை

 அங்கன்வாடி மையங்கள் திறப்பதற்கு கோரிக்கை

திருவாடானை: தொண்டி மகாசக்திபுரம், செங்கமடை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையங்களை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொண்டி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள மகாசக்திபுரம் மற்றும் திருவாடானை அருகே செங்கமடை ஆகிய இடங்களில் குழந்தைகள் நலன் கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 6 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் வாடகை கட்டடத்தில் அமர்ந்துள்ளனர். இது குறித்து அங்கன்வாடி மைய அலுவலர்கள் கூறுகையில், காம்பவுண்ட் சுவர், மின்சாரம் போன்ற பல்வேறு பணிகள் முடியாமல் உள்ளன. அப்பணிகள் முடிந்தவுடன் திறக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை