உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் தெருவில் பெயர் பலகைகள் வைக்க கோரிக்கை

முதுகுளத்துார் தெருவில் பெயர் பலகைகள் வைக்க கோரிக்கை

முதுகுளத்துார்; முதுகுளத்துார் பேரூராட்சியில் தெருக்களில் பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் தெரு பெயர் பலகை உள்ளது. ஏராளமான இடங்களில் தெருக்களின் பெயர் பலகை இல்லாமல் உள்ளது.இதனால் வெளியூரில் இருந்து வரும் மக்கள் தெருக்கள் பெயர் தெரியாமல் சிரமப்படுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. ஒருசில இடங்களில் பெயர் பலகை சேதமடைந்துள்ளது. எனவே முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள தெருக்களில் பெயர் பலகை வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை