உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பளம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

உப்பளம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

திருவாடானை: தொண்டி அருகே அரசு உப்பளத்தை மீண்டும் துவக்கி வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழில் உள்ளது. தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரை பகுதியில் இந்திய அரசு உப்பு இலாகாவிற்கு சொந்தமான 100 ஏக்கர் இடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உப்பளம் செயல்பட்டது. கடல் நீரை பாத்திகளில் நிரப்பி கடல் நீரில் இருந்து கல் உப்பை பிரித்து எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பகுதியில் இறால் பண்ணைகள் அதிகரித்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு மூடப்பட்டது. அந்த இடம் தற்போது காலியாக உள்ளது.இங்கு மீண்டும் உப்பு உற்பத்தியை துவக்கி வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தீர்த்தாண்டதானம் வள்ளிநாயகம் கூறியதாவது:தீர்த்தாண்டதானம் கடற்கரை ஓரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உப்பளம் துவங்கப்பட்டது.ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. நாளைடைவில் இறால் பண்ணைகள் அதிகரித்ததால் அந்த இடம் மேடாகவும், உப்பளம் தாழ்வு பகுதியிலும் அமைந்தது. கழிவு நீர் உப்பளத்தில் இறங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் மூடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மீண்டும் உப்பளத்தை துவக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம்.துாத்துகுடியை தலைமையிடமாக கொண்டு உப்பள அலுவலகங்கள் உள்ளன. ஆகவே யாரை அணுகுவது என்று தெரியவில்லை. 100 ஏக்கர் இடத்தில் இருந்த உப்பளம் தற்போது காலியாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை