உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்பு; படிப்பை தொடர நடவடிக்கை 

ராமநாதபுரத்தில் ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்பு; படிப்பை தொடர நடவடிக்கை 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்கப்பட்டு படிப்பை தொடர குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடவடிக்கை எடுத்துள்ளது.நயினார்கோவில் அருகே நகரமங்கலம் கண்மாயில் கொத்தடிமை சிறுவன் ஆடு மேய்ப்பதாக குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் கிடைத்தது. குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, போலீசார் நகரமங்கலம் கண்மாய் பகுதிக்கு சென்றனர்.அங்கு 14 வயது சிறுவன் நுாறு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரித்தனர். அவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெத்தனாட்சிவயல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தந்தை ராஜா, தாய் நீலா என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து ராமநாதபுரம் அருகே காரடர்ந்தகுடியை சேர்ந்த நவசக்தி 56, என்பவர் சிறுவனை கொத்தடிமையாக பயன்படுத்தி ஆடு மேய்க்க வைத்தது தெரிய வந்தது. சிறுவன் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறுவன் தொடர்ந்து படிப்பதற்கு குழந்தைகள் நலக்குழு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொத்தடிமையாக்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை