உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வணிக கட்டடத்தின் வாடகைக்கு ஜி.எஸ்.டி., ரத்து செய்ய தீர்மானம்

வணிக கட்டடத்தின் வாடகைக்கு ஜி.எஸ்.டி., ரத்து செய்ய தீர்மானம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் வணிக கட்டடங்கள் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் குப்தா ஆர்.கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தும் வணிக கட்டடத்தின் வாடகை மீதான 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக உள்ளாட்சிகள் 2022--23 ல் குடியிருப்பு, வணிகப்பயன்பாடு மற்றும் உற்பத்தி நிலையங்களுக்கான சொத்து வரியை 50 முதல் 150 சதவீதம் வரை உயர்த்திய பிறகும் ஆண்டுதோறும் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. கால தாமதமாக செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கு எப்போதும் இல்லாமல் தாமத கட்டணம் மாதா மாதம் ஒரு சதவீதம் விதிக்கப்படுவதையும் ரத்து செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ