மேலும் செய்திகள்
நெய்வேலியில் மா.கம்யூ., நகர மாநாடு
22-Oct-2024
முதுகுளத்துார்; வீணாக கடலில் கலக்கும் வைகை ஆற்று தண்ணீரை முதுகுளத்துார் தொகுதி விவசாயிகளுக்கு பங்கீடு வழங்க வேண்டும் என்று தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முதுகுளத்துாரில் மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா மாநாடு நடந்தது. உறுப்பினர்கள் சந்திரசேகரன், தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார். தாலுகா செயலாளர் முருகன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். பின்பு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது. புதிய செயலாளராக கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.வீணாக கடலில் கலக்கும் வைகை தண்ணீரை பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பயன்படும் வகையில் முதுகுளத்துார் தொகுதி மக்களுக்கு உரிய பங்கீடு வழங்க வேண்டும். முதுகுளத்துார் புறவழிச்சாலை பணிகளை கால தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும். முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை அகற்ற வேண்டும். 2023--24 ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு பயிர் காப்பீடு தொகையும், வெள்ள நிவாரணத் தொகை வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன் நன்றி கூறினார்.
22-Oct-2024