வேலு நாச்சியாருக்கு மரியாதை
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு த.வெ.க., வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ராமநாதபுரம் அருகே பாரதிநகர் பஸ்ஸ்டாப் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் த.வெ.க., ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணித்தலைவர் தமீம், இளைஞரணித்தலைவர் ரஞ்சன், மாவட்ட தொண்டரணி தலைவர் வன்னிமுத்து, துணை செயலாளர் முத்துக்குமார், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் நிஷாத் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். வீரமங்கை வேலுநாச்சியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.