உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி 18வது வார்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

பரமக்குடி 18வது வார்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு மேல நாயக்கர் தெருவில் பழைய இரும்பு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றில் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இந்த வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் ஆங்காங்கே இரும்பு மின்கம்பங்கள் உள்ளன. இதில் சிலவற்றை கடந்த சில மாதங்களில் அகற்றி மாற்றி உள்ளனர். குறுகிய சந்து பகுதியாக இருக்கும் மேல நாயக்கர் தெருவில் இரும்பு மின் கம்பத்தின் கீழ் பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் ஒரு பக்கம் மட்டுமே உயர் அழுத்த மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளதால் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் விபத்து அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே பழைய இரும்பு மின்கம்பங்களை அகற்றி மாற்று கம்பத்தில் மின் கம்பிகளை பொறுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை